Saturday, April 28, 2012

பெண்களை புரிந்து கொள்வது எப்படி?



இந்தப் பொண்ணுங்க இருக்காங்களே...

அவங்க சோகமா இருக்கும் போது , ஏன் சோகமா இருக்கேன்னு நாம கேட்டா, ஒண்ணுமில்லையேன்னு பதில் வரும். சரி நாமளும் ஒண்ணுமில்லை தானேன்னு நெக்ஸ்ட் டாபிக் ஓபன் பண்ணினா, நான் வருத்தமா இருக்கேன் ஆனா நீ அதைப் பத்தி கொஞ்சம் கூட கண்டுக்க  மாட்டே இல்ல...இப்ப எல்லாம் உனக்கு என்மேல லவ்வே இல்லைன்னு அணு குண்டை தூக்கி அசால்ட்டா நம்ம மேல போட்டுருவாளுங்க.

அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல நீ சொல்லுன்னு சொன்னா, அதெல்லாம் ஒன்னுமில்லைன்னு சொல்லிட்டு வீட்டுக்கு போய்டுவாங்க.
நாம ஏதாவது கேட்டு மசேஜ் பண்ணினா, ம்ம், ஓகே, யா...இப்படியே ரிப்ளை பண்ணி கடுப்பேத்துவாங்க...கொலைவெறியாகி என்னன்னு 
கேட்டுடலாமான்னு வாயத் தொறக்குற நேரத்துல உனக்கு என்னை பிடிக்கல, நீ என்னை மதிக்கல, நான் உனக்கு இம்பார்டன்ட் இல்லை..இது மாதிரி ஏதாவது டபுள் மீனிங்ல பார்வர்ட் மசேஜ் அனுப்பிடுவாளுங்க..

வாழ்க்கையே வெறுத்துப் போய் இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு கேட்டுடலாம்ன்னு மொபைல்ல டயல் பண்ணினா, அது பாட்டுக்கு 
பாலன்ஸ் முடிஞ்சு போச்சுன்னு சொல்லும்...மொறைக்கிற பிரெண்ட்கிட்டேயோ, அம்மா, அப்பாகிட்டயோ கெஞ்சி கூத்தாடி இல்லாட்டி போனா, திருடியாவது ரீ லோடு பண்ணி...என்ன தான் உன் பிரச்சனைன்னு கேட்போம்...இப்ப எல்லாம் நான் உனக்கு பிரச்சனையா போயிட்டேன்ல ..இப்படி ரிப்ளை வரும்..இதுல ஆரம்பிச்சு மூணாம் உலகப் போர் தோத்துப் போற ரேஞ்சுல சண்டை போட்டு முடிவுல சரி போனை வைன்னு சொல்லுவோம்...

நீ தானே கால் பண்ணினே, நீயே வைன்னு பதில் வரும்...நாம வைக்கலாமா வேணாமான்னு யோசிக்கும் போதே, எதுக்கு மறுபடி 
பிரச்சனைன்னு பாலன்ஸ் தீர்ந்து போய் அதுவே கட் ஆகிடும்..
நாம தான் இளிச்சவாய்கள் ஆச்சே...பிரச்னையை அவ்ளோ சீக்கிரமா முடிச்சிடுவோமா...விடாம சட்டை பாக்கெட்ல தேடி பொறுக்கி ஒரு ரூபாய் காயினை கண்டு பிடிச்சு மறுபடி கால் பண்ணினா, நோ ரெஸ்பான்ஸ் ...சரிதான் போடின்னு வீம்பா வீட்டுல வந்து படுத்த அடுத்த செக்கனே ஒரு எஸ்எம்எஸ் வரும்...கால் கட் பண்ணுற அளவுக்கு பெரியாளாயிட்டேன்னு...பதறியடிச்சு...இல்லை மொபைல் பாலன்ஸ் தீர்ந்து போச்சுன்னு ஒரு குய்க் எஸ்எம்எஸ் தட்டி விட்டுட்டு கடைல கட்டி தொங்க விட்ட இறைச்சியை நாய் பார்க்கிற மாதிரி மொபைலையே பார்த்துட்டிருப்போம் ரிப்ளை பண்ணுவாள்ன்னு...ம்ஹூம்...வழக்கம் போலவே நோ ரெஸ்பான்ஸ் தான்...

நைட் முழுக்க, நம்ம லவ் இப்படி சொதப்பிட்டுதேன்னு பீல் பண்ணி எப்ப தூங்குறோம்ன்னு தெரியாம தூங்கி எந்திரிச்சு காலைல மொபைல் பார்த்தா, சாரின்னு ஒரு எஸ்எம்எஸ் வந்திருக்கும்...ச்சே ச்சே நான் நேத்தே அதெல்லாத்தையும் மறந்துட்டேன்னு பதில் அனுப்பிட்டு அவளை பார்க்கலாம்ன்னு ஆசை ஆசையா கிளம்பி போய் நிப்போம்.

அங்க என்ன நடக்கும் தெரியுமா? மறுபடியும் முதல் வரியை படியுங்க...

No comments:

Post a Comment